Friday, April 10, 2009

புரட்சி திருமணம் என்றால் என்ன?

சுயமரியாதைத் திருமணம் என்பது எது?

நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாத
திருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?

நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று
அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான
காரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவு
திருமணம் ஆகும்.

தமிழர் திருமணம் என்றால் என்ன?

புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள
உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனு
நீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்பு
முறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்)
திருமணமாகும்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?

ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கை
இல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர்
மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப்
பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும்,
மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து
காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

புரட்சித் திருமணம் என்றால் என்ன?

தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?

கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம்,
ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒரு
வேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள்
சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்ன
சொல்லலாம்?


நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்று
சொல்லலாம்.



--------------தந்தை பெரியார் அவர்கள் “சித்திர புத்திரன்” என்கிற புனைப் பெயரில்
14-03-1950 "விடுதலை" நாளிதழில் எழுதியது
.

2 comments:

  1. nalla karuthu. aana entha soothira mundamum ithai patri yosikkathu.

    raja

    ReplyDelete
  2. திரு. ராஜா அவர்கள் எந்த பிரிவை சேர்ந்த "முண்டம்" என்று சொன்னால் பரவாயில்லை.
    முதலில் திருமணம் என்பது மிகப்பெரிய உலகளாவிய முறை. உங்களுக்கு இந்திய முறை பிடிக்கவில்லை என்றால் வேறு நாட்டினரின் முறை உங்களை கவர்ந்து உள்ளது என்று அர்த்தம். திருமணம் எந்த முறையாயினும் அதன் நோக்கம் ஒன்றுதான். அதாவது கலவி (உடலுறவு). கலவி என்பது இருவர் சார்ந்த சொந்த விஷயம். அதற்கு அங்கீகாரம் அளிக்க சமுதாயம் செய்த ஏற்பாடு திருமணம் என்ற ஒரு நிகழ்ச்சி. நம்மவர்கள் அதை சடங்காக மாற்றிவிட்டனர். இது எப்படி இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. திருமணம் இல்லாமல் எல்லோரும் கலவி கொள்ள முடியும். ஆனால் உலகம் முழுக்க இப்படி இருந்திருந்தால் நாம் இன்னும் மிருகங்களாக மட்டுமே இருப்போம்.

    ReplyDelete